பள்ளிகளில் நடைபெறும், சாதிய மோதல்களுக்கு முடிவுகட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே, பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் .பெ. சண்முகம் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதிய பிரச்னைகள் இல்லையென கூறிய சபாநாயகர் அப்பாவுவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.