Kerala | நிற்கும்போதே திடீரென தானாக நகர்ந்து சென்ற பஸ் - சிக்கிய பெண் பயணி.. திக்.. திக்.. காட்சி
கேரள மாநிலம் கோட்டயத்தில், அரசு பேருந்து ஒன்று, தானாக பின்னோக்கி நகர்ந்து கவிழ்ந்ததில், பெண் பயணி ஒருவர் காயமடைந்தார். திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற அரசு பேருந்து, கோட்டயத்தில் உள்ள குருவிளாங்காடு என்ற பகுதியில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் உணவு அருந்துவதற்காக இறங்கிய நிலையில், திடீரென பேருந்து பின்னோக்கி சென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் பயணி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.