Krishnagiri | உடைக்கப்பட்ட பூட்டு.. விநாயகர் கோயிலில் அதிர்ச்சி..
கோவில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம், 10 சவரன் நகை திருட்டு
கிருஷ்ணகிரியில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு 1 லட்சம் ரூபாய்,10 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அந்தேரிப்பட்டியிலுள்ள ஸ்ரீ ராஜகணபதி விநாயகர் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு,1 இலட்சம் ரூபாய்,10 சவரன் நகை, ரேடியோ செட், பூஜை சாமான்கள் என அனைத்து பொருள்களும் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. கிராம மக்களின் புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.