ரூ.9 ஆயிரம் லஞ்சம்.. கையும் களவுமாக மாட்டிய.. பில் கலெக்டர் அதிரடி கைது
சிவகங்கையில் ரூபாய். 9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் கணேசன் என்பவர் சொத்துவரி பெயரை மாற்ற நகராட்சி அலுவலக பில் கலெக்டரான பாலமுருகனை நாடியபோது அவர் பெயர் மாற்றம் செய்ய ரூ20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் முன் தொகையாக ரூ9 ஆயிரம் பணத்தை வழங்கவும் கூறியுள்ளார். இதில் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கணேசன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாரளித்ததையடுத்து, பாலமுருகன் கணேசனிடம் இருந்து பணத்தை பெற முயன்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.