திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைக்க ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், அங்கு மழையினால் சேறும் சகதியுமாக மாறியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ஆடி மாதத்தை ஒட்டி, பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் வந்தவாறு உள்ளனர். இந்த நிலையில், பொங்கல் வைக்கும் கூடாரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் மழையினால் சேறும் சகதியுமாக காணப்பட்டுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.