திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் வங்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். வங்கி ஊழியராக பணியாற்றி வந்த இவர், சங்கரன் கோயில் சாலையை கடக்க முயன்ற போது, அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அங்கிருக்கும் குடியிருப்புவாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. செல்வராஜின் உடல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சாலையில் வேகத்தடை அமைக்கவும், மின் விளக்குகள் அமைக்கவும் அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.