பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகராட்சி வாரச்சந்தையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், 3 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மணப்பாறை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட10 முதல் 20 கிலோ எடையுள்ள ஆடுகளை, பக்ரீத் பண்டிகையை கொண்டாட ஏராளமான இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் வாங்கி சென்றனர். இதனிடையே, 10 கிலோ கிடாய் ஆடு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை என விற்பனை ஆனதால், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.