அறுபடை வீடு மாதிரி கண்காட்சி - மனம் உருக கந்தசஷ்டி கவசம் பாடிய சிறுமி

Update: 2025-06-22 07:37 GMT

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள, அறுபடை வீடு மாதிரி கண்காட்சியில் மனம் உருக கந்தசஷ்டி கவசம் பாடிய சிறுமியால் பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். அறுபடை முருகன் கோயில் மாதிரி கண்காட்சியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதன்படி, தனது உறவினர்களுடன் வந்து சாமி தரிசனம் செய்த சிறுமி ஒருவர் அறுபடை வீடு மாதிரி கண்காட்சி முன்பு அமர்ந்து மனம் உருக கந்தசஷ்டி கவசம் பாடியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்