கரூரில் இருந்து ஈரோடுக்கு 7 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஆகஸ்ட்12, 15, 18, 21, 23, 26 மற்றும் 29 ஆகிய ஏழு நாட்களுக்கு செங்கோட்டையிலிருந்து ஈரோடு செல்லும் விரைவு ரயில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல ஈரோட்டில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில், கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் என்றும், திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் ரயில் 7 நாட்களுக்கு கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.