மாணவர்கள் கவனத்திற்கு!! வெளியானது முக்கிய அறிவிப்பு

Update: 2025-05-25 08:56 GMT

கால்நடை மருத்துவப்படிப்புக்கு மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவப்படிப்புக்கு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மே 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 7 அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பிரதான கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் 660 இடங்களும், மேலும் பல்வேறு பி.டெக்., படிப்புகளும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. இதற்கு, மே 26ஆம் தேதி (நாளை) முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, கால்நடை மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு மதிப்பெண் தேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்