CCTV | Petrol Bunk | VCK | தாக்குதல் பதிவான `CCTV’ ஆதாரத்தை கொடுத்ததால் அடித்தே கொலை

Update: 2025-07-03 05:11 GMT

பெட்ரோல் பங்கின் உரிமையாளர் அடித்து கொலை - 4 பேர் கைது

கூவத்தூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கின் உரிமையாளரை, விசிக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்த கும்பல் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே மோகன்ராஜ்க்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் போட வந்த இளைஞரிடம், விசிக பிரமுகர் ரகு மற்றும் அவரது நண்பர் தகராறில் ஈடுபட்டு வாக்கு வாதம் செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ பதிவை கொண்டு பாதிக்கப்பட்ட இளைஞர் ரகு மீது புகாரளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகு, சிசிடிவி காட்சிகளை கொடுத்த பெட்ரோல் பங்கின் உரிமையாளரை தனது கூட்டாளிகள் 8 பேருடன் சேர்ந்த கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்