கஞ்சா போதையில் அட்ராசிட்டி = ரயிலில் பயணித்த வடமாநில இளைஞரை கடத்தி அரிவாள் வெட்டு

Update: 2025-12-28 08:29 GMT

கஞ்சா போதையில் அட்ராசிட்டி = ரயிலில் பயணித்த வடமாநில இளைஞரை கடத்தி அரிவாள் வெட்டு

ரயிலில் பயணித்த வடமாநில இளைஞரை கடத்தி, திருத்தணியில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்த சிறுவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் மதில் சுவர் வெளிப்புறத்தில் நேற்று கை, கால், தலை மற்றும் உடல் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் கீழே விழுந்து உள்ளதை பார்த்த ரயில் பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் சிகிச்சை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் சேர்ந்த் சுராஜ்(34) என்று தெரியவந்தது.

சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்த வட மாநில வாலிபரை திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஏறிய வாலிபர்கள் வடமாநில வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து ரயில் நிலையம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகள் வைத்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் வாலிபர்கள் 4 பேர் வட மாநில வாலிபர் கழுத்தில் கத்தியை வைத்து ரிலீஸ் வெளியிடப்பட்டது பார்த்து விசாரணை நடத்தினர்.

இதில் திருவாலங்காடு அருகே அரிச்சந்திராபுரம் சேர்ந்த நந்தகோபால் (17), அரக்கோணம் சேர்ந்த சந்தோஷ் (17), விக்கி(17),திருத்தணி அருகே நெமிலி சேர்ந்த சந்தோஷ் (17) ஆகிய 4 பேர் கஞ்சா போதையில் வட மாநில வாலிபர் கழுத்தில் கத்தியை வைத்து ரிலீஸ் வெளியிட்டதும் தடுத்த அவரை கொலை வெறி தாக்குதல் நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டது தொடர்ந்து 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்