தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள சடையப்பபுரத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர் 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்..
ராமச்சந்திரபட்டிணம் பகுதியில் உள்ள தோட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகள் அங்கிருந்து வெளியேறி அருகில் இருந்த தண்டவாள பகுதிக்கு சென்றுள்ளன. அப்போது செங்கோட்டையிலிருந்து ஈரோடு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி ஆடுகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரயிலில் அடிபட்டு இறந்த ஆடுகளின் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்த நிலையில், ஒரு சில ஆடுகள் கால்கள் முறிந்தும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளன.. தகவலறிந்து சென்ற தென்காசி ரயில்வே போலீசாரும், செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படையினரும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...