ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள மேலும் 8 பேர் ஜாமீன் கோரிய மனுக்கள், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 16) விசாரணைக்கு வர உள்ளன. இவ்வழக்கில் முதல் குற்றவாளியான நாகேந்திரன் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரின் மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் சதிஷ், சிவா ஆகிய 2 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த சூழலில், இந்த வழக்கில் சிறையில் உள்ள ராஜேஷ், விஜய், செந்தில் குமார் உள்ளிட்ட 8 பேரும் ஜாமீன் கோரிய மனுக்கள் விசாரிக்கப்பட உள்ளன.