"திமுக - கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்.."

Update: 2025-06-18 13:45 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்த மண்டல குழு கூட்டத்தில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 96வது வார்டு பகுதியில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என கம்யூனிஸ்ட் உறுப்பினர் விஜயா குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட திமுக கவுன்சிலர் கருப்பசாமி, எனது வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை எனக் கூறினார். இதனால் இரண்டு கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே மண்டல தலைவர் சுவிதா விமல் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்