அண்ணா பல்கலை. வழக்கு - ஞானசேகரனிடம் 2 நாள் சிபிசிஐடி விசாரணை நிறைவு

Update: 2025-05-14 16:12 GMT

அண்ணா பல்கலைகழக வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், சிபிசிஐடி விசாரணைக்கு பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஞானசேகரன்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இவர் மீதுள்ள மற்றொரு வழக்கான, கோட்டூர்புரம் பெண் வன்கொடுமை வழக்கில், விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் இரண்டு நாள் கஷ்டடியில் எடுத்தனர்.

தற்போது விசாரணை முடிந்த நிலையில், ஞானசேகரன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்