அன்புமணி ராமதாஸ் நடத்தும் உரிமை மீட்பு பயணத்தில், பாமக கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி, வெள்ளிக்கிழமை முதல் தொண்டர்களை சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் சார்பில் அளித்துள்ள மனுவில், கட்சி நிறுவனரின் அனுமதியின்றி கட்சிக்கொடி, நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சார பயணம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.