தஞ்சை தமிழ் பல்கலைகழக இணையதளத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.புகைப்படம் இடம் பெறவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
1981 ஆம் ஆண்டு இந்த பல்கலைகழக்கதை எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்த நிலையில் அதிகாரபூர்வ இணையதளத்தில் அவரது பெயரோ, புகைப்படமோ இல்லை என கூறப்படுகிறது. முதல் பக்கத்தில் உள்ள போட்டோ கேலரியில் திருவள்ளுவர் புகைப்படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.