ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், வரும் 22ஆம் தேதி மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக அறிவித்தார். தோட்டக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கருத்தரங்கில் பங்கேற்பதால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழ்மாறன் தெரிவித்தார்