ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா

Update: 2025-06-01 12:07 GMT

கும்பகோணம் நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 28 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.இதனை தொடர்ந்து ஆகாச மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் மலர் தூவி வரவேற்று வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்