அமமுகவினரை கண்டதும் அண்ணா சிலையை பூட்டிய அதிமுகவினர் - தூத்துக்குடியில் பரபரப்பு

Update: 2025-09-15 17:45 GMT

தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலையை பூட்டி சென்ற அதிமுகவினரை கண்டித்து, அமமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு, மாலை அணிவிக்க அமமுகவினர் வரவிருந்தனர். இதனை அறிந்த அதிமுகவினர், முன்னதாகவே அண்ணா சிலைக்கு மாலை போட்டு விட்டு, சிலைக்கு பூட்டு போட்டு சென்றதால் அமமுகவினர், மாலை அணிவிக்க முடியாமல், போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து, அவர்கள் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்