பூட்டை உடைத்து அண்ணா சிலைக்கு மாலை போட்ட அதிமுகவினர் - சென்னையில் பரபரப்பு

Update: 2025-07-11 03:42 GMT

சென்னை ஆலந்தூரில் புதிதாக நியமிக்கபட்ட அதிமுக நிர்வாகிகள் கேட் பூட்டை உடைத்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆசர்கானாவில் உள்ள அண்ணா சிலைக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் மாலை அணிவிக்க வந்துள்ளனர். அப்போது அங்கு இரும்பு வேலியால் பூட்டு போடப்பட்ட நிலையில், பூட்டுக்கான சாவி இல்லாததால், பூட்டை உடைத்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்