விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட அதிமுக பிரமுகர் - அதிர்ச்சி காரணம்

Update: 2025-08-24 08:56 GMT

மதுரை செல்லும் விமானத்தில், சூட்கேஸ் மாற்றி வைத்தை எதிர்த்து வாக்குவாதம் செய்த்தால் அதிமுக பிரமுகர் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

மதுரையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஜெயச்சந்திரன் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியுள்ளார்...

அப்போது விமான பணிப்பெண்கள், அவரது லக்கேஜை வேறு இடத்தில் வைத்ததாகக் கூறி ஜெயச்சந்திரன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

விமான பணிப்பெண்கள் விமானியிடம், இது குறித்து புகார் செய்த நிலையில்,

இண்டிகோ ஏர்லைன்ஸ் செக்யூரிட்டி அதிகாரிகள் ஜெயச்சந்திரனை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர்.

விமானம், 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே இன்டிகோ ஏர்லைன்ஸ் மேனேஜர், விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்து

ஜெயச்சந்திரன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் 5 மணி நேர விசாரணைக்கு பின் எழுதி வாங்கிக்கொண்டு, ஜெயசந்திரனை விடுவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்