அதிமுக - திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் - திடீர் பரபரப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் தொடங்கிய உடன் அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சியில் எந்த வேலையும் ஒழுங்காக நடக்கவில்லை, ஊழல் தான் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இருதரப்பினரும் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, திமுக உறுப்பினர்கள் மற்றும் அவர்களது கணவர்களினால் அச்சுறுத்தல் இருப்பதாக அதிமுக உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.