``கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு’’ - நாமக்கல்லில் மீண்டும் பயங்கரம்
கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு மோசடி - பெண் குற்றச்சாட்டு
நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் கிட்னி திருட்டு விவகாரம் பூதாகரமான நிலையில், வறுமை மற்றும் கடனில் தவிப்போரை குறிவைத்து கல்லீரல் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு சாய ஆலையில் வேலைப் பார்த்து வந்த இவர், குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்பாளையம் பகுதியில் சிலரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். இந்த கடனை அடைப்பதற்காக ஈரோட்டை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம் கிட்னியை விற்பதாக பேசியுள்ளனர். பின்பு சென்னையில் ஒரு மருத்துவமனையில் வைத்து கிட்னிக்கு பதிலாக 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி, அப்பெண்ணின் கல்லீரலை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விற்றதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.