கோவை மாநகரில் வரியை உயர்த்தியதாக கூறப்படும் விவகாரம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கூடுதல் வரி விதிக்கப்படவில்லை என திட்டவட்டமாக கூறினார். அப்படி விதிக்கப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வ அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.