திருச்செந்தூர் கோயிலில் குடும்பத்துடன் நடிகர் தியாகு சுவாமி தரிசனம் செய்தார். காரில் இருந்து அடையாளம் தெரியாத அளவிற்கு நடக்க முடியாத நிலையில் இறங்கிய அவரை கோயில் பணியாளர் ஒருவர் ஏற்றி கோயிலுக்குள் தரிசனம் செய்ய அழைத்துச் சென்றார்.
இதை தொடர்ந்து, தரிசனம் முடிந்ததும் வெளியே வந்த அவரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர்கள் அவருடன் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.