விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூர் கிராமத்தில், தண்டுவடம் பாதிக்கப்பட்ட சிறுமி அனுசியாவுக்கு நடிகர் பாலா வழங்கிய நிதியுதவியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வீட்டில் ஓய்வில் இருக்கும் அந்த சிறுமியை நடிகர் பாலா நேரில் பார்த்து நலம் விசாரித்தார். மேலும், தனது செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டையும் திறந்து வைத்து, சிறுமியின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். நடிகர் பாலாவுக்கு பிறந்தநாள் பரிசாக கைக்கடிகாரம் ஒன்றை சிறுமி வழங்கினார்.