திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அனுமதியின்றி ஏரியில் இருந்து மண் எடுத்து, ரியல் எஸ்டேட், செங்கல் சூளைகளுக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். புலவன்பாடி கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், அனுமதியின்றி லாரிகள் மூலம் மண் எடுத்து செல்லப்படுவதாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசாரிடம் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அதிகாரிகளின் துணையுடன் மணல் கொள்ளை நடைபெறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.