பீரோவை உடைத்து எடுக்கப்பட்ட `டப்பா’.. “எல்லாம் போச்சே..“ என கதறியழுத பெண்

Update: 2025-04-20 14:02 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கருணாநிதி தெரு பகுதியைச் தெரு பகுதியைச் சேர்ந்த அருள் மனைவி ஷாமிலா (26) இவர் கழுத்தில் அணிந்திருந்த தன்னுடைய நான்கரை சவரன் தங்க நகையை கழட்டி பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து நேற்று முன்தினம் பீரோவில் வைத்துள்ளார்.

மேலும் பீரோவின் சாவியை வீட்டின் சுவற்றில் மாட்டி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையையில் இன்று ஷாமிலா வின் மாமியார் புஷ்பா வீட்டின் அருகே உள்ள நிலத்தில் வேலை செய்து வந்துள்ளார் அப்போது அவருக்கு சாப்பாடு எடுத்துச் சென்றபோது ஷமிலா கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகையின் பிளாஸ்டிக் டப்பா கிணற்றில் இருந்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த ஷமிலா உடனடியாக வீட்டிற்கு சென்று பீரோவை பார்த்தபோது பீரோவின் வெளி கதவு சாவியால் திறக்கப்பட்டும் உள் கதவு உடைக்கப்பட்டு நான்கரை சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்