உயிர்பயத்தில் மக்கள் - ஊருக்குள் புகுந்த கரடி - அலறவிடும் காட்சி

Update: 2025-04-23 03:51 GMT

நெல்லை மாவட்டம் அம்பை அருகே கடந்த மாதம் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த கரடியை வனத்துறை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் கரடி ஒன்று சுற்றித்திரிவது சிசிடிவி-யில் பதிவாகியிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி-யில் பதிவான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கரடியை பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்