Cuddalore | பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திம்பிய தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. ஸ்பாட் அவுட்
கடலூரை அடுத்த புதுச்சத்திரம் அருகே, பிறந்த நாள் விழாவிற்கு சென்றுவிட்ட கணவன், மனைவி இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் ரகுராமன், பரிமளா தம்பதி. இவரும் உறவினர் பிறந்த நாள் விழாவற்காக சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் படுகாயமடைந்த ரகுமான், பரிமளா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு உடற்கூடாற்விற்காக அனுப்பி வைத்தனர்.