உத்தரபிரதேசத்தில் பொருட்காட்சியில் சுற்றி கொண்டிருந்த ராட்டினம், திடீரென உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசம் பாதல்பூரில் உள்ள பொருட்காட்சியில், Break Dance swing என்று அழைக்கப்படும் ராட்டினத்தில் பொதுமக்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ராட்டினத்தின் சில பகுதிகள் திடிரென உடைந்து விழுந்தது. இதில் இருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.