கடையை திறக்க போனவருக்கு பேரதிர்ச்சி.. ஓர் இரவில் முளைத்த திடீர் `கல் சுவர்’..
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காமராஜ் பேருந்துநிலையம் தேசிய நெடுஞ்சாலை அருகே வாடகைக்கு பேக்கரி கடை நடத்தி வரும் நபரது கடை முன்பு கடையின் புதிய உரிமையாளர் மதில் சுவர் எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷோபியா என்பவருக்கு சொந்தமான கடையை ஜெயசேகர் என்பவர் மாத வாடகைக்கு எடுத்து பேக்கரிகடை நடத்திவரும் நிலையில், ஷோபியா கடையை தினேஷ் என்பவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜெய்சங்கர் கடையை காலி செய்ய மறுத்ததால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தினேஷ், இரவோடு இரவாக கடைக்கு முன்பு மதில் சுவரை எழுப்பியுள்ளார்.