ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் தேருக்கு புதிதாக வாங்கப்பட்ட 1,300 அடி வடகயிறு
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் கடந்த தேர் திருவிழாவில் தேரை இழுக்கும் போது வடம் அறுந்தது... இதனைத் தொடர்ந்து அறநிலையதுறை உத்தரவின்படி சுமார் 7 லட்சம் மதிப்பில் சுமார் 1300 அடி நீளம் கொண்ட ஆறு வடக்கயிறுகள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் காந்திமதி அம்பாள் திருத்தேருக்கு 19 அங்குல விட்டம் கொண்ட தென்னை நார்களாலான 2 வடக்கயிறுகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து வடக்கயிறுகளுக்கு இரும்பு வளையங்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.