தலைக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டவர் - என்கவுன்ட்டரில் கொடூர மரணம்

Update: 2025-09-15 11:06 GMT

ஜார்கண்டில், தலைக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் கமாண்டர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் Hazaribagh பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சி.ஆர்.பி.எப் மற்றும் போலீசார் இணைந்து, அப்பகுதியை சுற்றிவளைத்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், மாவோயிஸ்ட் கமாண்டரான சாஹ்தியோ சோரன் என்பவர் கொல்லப்பட்டார். அவரது தலைக்கு, ஒருகோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 35 லட்சம் ரூபாய் வெகுமதி ரகுநாத், பிர்சன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, நக்சல் தேடுதல் வேட்டை குறித்த வீடியோவை சி.ஆர்.பி.எஃப் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்