இடத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நபர் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வட்டிக்கு பணம் கொடுத்த நபர் தனது இடத்தை அபகரித்து விட்டதாக கூறி கோபால் என்ற நபர் தனது குடும்பத்துடன் மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அவரை தடுத்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.