குளிக்க சென்று கடலில் மூழ்கிய சிறுமி - காப்பாற்ற சென்ற உறவினருக்கும் நேர்ந்த துயரம்..
தூத்துக்குடி அருகே கடலில் குளிக்க சென்ற 16 வயது சிறுமி உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி சவேரியர்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி விஜயன். இவர் தனது உறவினரான 16 வயது சிறுமி காளீஸ்வரி உட்பட சிலருடன் சிலுவைப்பட்டி கடற்கரை பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது காளீஸ்வரி கடலில் மூழ்குவதை பார்த்த அந்தோணி சிறுமியை மீட்க சென்ற போது அவரும் கடலில் மூழ்கினார். இதனையடுத்து அருகில் இருந்த மீனவர்கள் சிறுமியின் உடலை மீட்ட நிலையில் அந்தோணியின் உடல் நீண்ட நேரத்திற்கு பிறகு கரை ஒதுங்கியது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.