கோயம்பேட்டில் `பூ' விற்கும் பெண்ணிடம் பணத்தை பறித்த கும்பல்..போலீசார் அதிரடி Action

Update: 2025-06-14 06:07 GMT

சென்னை கோயம்பேட்டில், பெண்ணை மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் மூன்று பேர் சேர்ந்து அவரிடம் 15 ஆயிரம் ரூபாய் பணம் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த வழக்கில், குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், செங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்திக், சூளைமேடு பகுதியை சேர்ந்த சத்தியா மற்றும் அன்புச்செல்வி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்