14 மாநில போலீசாரை அலைய விட்ட மோசடி கும்பல் - தீரன் பட பாணியில் அலறவிட்ட போலீசார்

Update: 2025-06-29 06:50 GMT

பிரபல நிறுவனங்கள் பெயரில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி - 5 பேர் கைது

போலி விளம்பரங்கள் மூலம் பிரபல கட்டுமான நிறுவனங்களின் பெயரில் நூறு கோடிக்கும் மேல் மோசடி செய்த 5 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பாட்னாவில் வைத்து கைது செய்தனர். இவர்களால் பாதிக்கப்பட்ட சேதுராமன் என்பவர் புதுச்சேரி

சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில், 14 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த ராகுல்குமார் சிங், உத்தம் விஷால் குமார், ராயுஷன் குமார், அபிஷேக் குமார், தயாந்த் ஆகியோர் பாட்னாவில் வைத்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 34 லட்சம் ரூபாய் பணம், லேப்டாப் மற்றும் 40 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்