சென்னை வியாசர்பாடியில் மனைவியின் கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாலை 4 மணியளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு வழியாக மனைவியுடன் சென்ற ராஜை, வழிமறித்த 2 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.