10 வயது அசாம் சிறுமிக்கு பாலியல் தொல்லை - பீகார் இளைஞர் கைது
ஒசூர் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பீகாரை சேர்ந்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். ஒரு கிராமத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர், தங்களது மகன் மற்றும் 10 வயது மகளுடன் குடும்பமாக தங்கி தொழிற்சாலைக்கு பணிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த தொழிலாளியான 20 வயது அவத்குமார் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், பீகாரை சேர்ந்த அவத்குமாரை போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.