ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்.26 Soyuz MS-26 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற 3 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழு பூமிக்கு பத்திரமாக திரும்பியது. ரஷ்ய விண்வெளி வீரர்கள் அலெக்ஸி ஓவ்சினின் Alexey Ovchinin, இவான் வாக்னர் Ivan Wagner மற்றும் நாசாவின் மூத்த விஞ்ஞானி டொனால்ட் பெடிட் Donald Pettit ஆகியோர் கஜகஸ்தானில் Kazakhstan தரையிறங்கினர். அதுகுறித்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
இந்த மூவர் குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 மாத ஆய்வை முடித்துள்ளது. நாசா விஞ்ஞானி டொனால்ட் பெடிட் தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது.