யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 52வது இடமும், தமிழக அளவில் 5ம் இடமும் பிடித்து ராமநாதபுரம் மாணவர் ஸ்ரீ ரஷத் சாதனை படைத்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ரஷத் என்ற மாணவர் முதல் முயற்சியிலேயே யூபிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார். இது குறித்து பேசிய அவர், நிதித்துறையில் தனக்கு ஆர்வம் உள்ளதாகவும், எந்த துறை கிடைத்தாலும் சிறப்பாக பணிபுரிவேன் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் ஸ்ரீ ரஷத்துக்கு உறவினர்களும், நண்பர்களும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.