தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இரு சக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில், 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பரமசிவம், தனது உறவினர்களான வெண்ணிலா, மற்றும் அவரது மகள்களான ஏஞ்சல் ஆராதியா மற்றும் ஆசினியா ஆகியோருடன் பசுவந்தனை சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த டேங்கர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் டேங்கர் லாரிக்கு கீழ் விழுந்த சிறுமி ஏஞ்சல் ஆராதியா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மற்ற மூவரும் படுகாயமடைந்த நிலையில்,
டேங்கர் லாரி ஓட்டுநர் ஆறுமுகச்சாமியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.