TN Rainfall | weather | 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. எச்சரிக்கை -அலர்ட் கொடுத்த வானிலை மையம்

Update: 2025-06-02 01:57 GMT

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் திங்கள் அன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடகிழக்கு வங்க கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்