குறுக்கே வந்த நாயால் 4 வயது சிறுமி பலி - மனதை ரணமாக்கும் தாயின் அழுகை காட்சி

Update: 2025-09-03 05:20 GMT

ஆரணியில், பைக்கின் குறுக்கே நாய் வந்து விழுந்த விபத்தில் சிக்கி, தந்தையோடு பைக்கில் சென்ற நான்கே வயதான அனாமிகா என்ற சிறுமி சிகிச்சை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆரணி அருகே முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நெசவு தொழிலாளி கார்த்திக் என்பவர், தனது மகளான அனாமிகா உடன் பைக்கில் சென்றார். கொசப்பாளையம் அரசமரம் அருகே சென்றபோது, திடிரென பைக்கின் குறுக்கே ஒரு நாய் நுழைந்த நிலையில், பைக்கில் தடுமாறிய 2 பேரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுமி வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்