சென்னையில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநரை கடித்து குதறிய 4 ராட்வீலர் நாய்கள்

Update: 2025-06-03 07:24 GMT

சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் நான்கு ராட்வீலர் நாய்கள் கடித்து ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தார். வழக்கம்போல் சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநரான முத்துவை, மகி என்பவர் நடைபயிற்சிக்காக அழைத்து வந்த ராட்வீலர் நாய்கள் கடுமையாக கடித்துள்ளன. இதனால் இரண்டு கைகளிலும் கடிபட்டு காயமடைந்த முத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மகி என்பவரின் வீட்டில் அதிக அளவில் ராட்வீலர் நாய்கள் வளர்க்கப்படுவதாகவும், அவை பாதுகாப்பின்றி அப்பகுதியில் சுற்றி திரிவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்