வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக தாக்கிய 30 பேர் - அலறி துடித்த பெண்கள், சிறுவர்கள்.. பகீர் வீடியோ
ஆரணி அருகே வழிப்பிரச்னை காரணமாக, 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அரியப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும், இவரது உறவினர் ரகுபதிக்கும் இடையே நிலத்திற்கு செல்லும் வழி தொடர்பான பிரச்னைகள் இருந்து வந்தது. இது தொடர்பாக மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுபதி, ராஜேந்திரன், விஸ்வநாதன் உள்ளிட்ட 30 பேர் கொண்ட கும்பல் மணிகண்டன் வீட்டில் நுழைந்து சராமரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் 3 பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்த நிலையில், அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.