SIயையே உல்லாசத்திற்கு அழைத்த 3 பேர் | நாகர்கோவிலில் அரங்கேறிய அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், உதவி ஆய்வாளரை உல்லாசத்திற்கு அழைத்த செவிலியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வடசேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் லட்சுமணன், நீதிமன்ற சாலையில் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் மற்றும் ஒரு இளைஞர், உதவி ஆய்வாளரிடம், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ஆயிரத்து 500 ரூபாய் தர வேண்டுமென கூறி, அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து லட்சுமணன், காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மூவரும் தப்பியோட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர். நெல்லை பணகுடியை சேர்ந்த இளம்பெண்ணை மீட்டு போலீஸ் நடத்திய விசாரணையில், பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.